கடன் கழுத்தை நெறிக்குதா? நீங்க செய்ய வேண்டியது "இது" மட்டும் தான்! தெளிவாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்

கடன் கழுத்தை நெறிக்குதா? நீங்க செய்ய வேண்டியது "இது" மட்டும் தான்! தெளிவாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்

கடன் என்பது கழுத்தின் மீது தொங்கும் கத்தி போல இருக்கும். கடனைக் கட்டி முடிக்க முடியாமல் பலரும் சிரமப்படுவதை நாம் பார்த்து இருப்போம்

இதற்கிடையே ஒருவர் கடன் வலையில் இருந்து தப்பிப்பது எப்படி.. இதன் பின்னணி என்ன.. இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். நம்மில் பலருக்கும் கடன் இருக்கும். ஆனால், அதை எப்படி அடைப்பது என தெரியாமல் நாம் குழப்பத்தில் இருப்போம். அவ்வளவு ஏன் பலருக்கும் கடனுக்கு என்ன காரணம்.. எவ்வளவு சம்பாதித்தாலும் போதுமானதாக இல்லையே என புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு எங்குப் பிரச்சனை என்பதே தெரியாமல் இருக்கும்.

ஆனந்த் சீனிவாசன் இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக எளிமையாக விளக்கியுள்ளார். ஒருவர் கடன் என்ற மாய வலையில் எப்படிச் சிக்குகிறார். அதில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்.. அதில் மீண்டும் சிக்காமல் இருக்கச் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்! இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "கடனை அடைக்க வேண்டும் என்றால் முதலில் கிரெடிட் கார்ட்டை உடைத்துத் தூக்கி போடுங்க.. கிரெடிட் கார்டு இல்லாமல் இருக்க பாருங்க.. ஏற்கனவே இருக்கும் கிரெடிட் கார்டில் இருக்கும் கடனை செட்டில் செய்ய வேண்டும். ஏன் கட் செய்து போடுங்கள் எனச் சொல்கிறேன் என்றால்.. இதற்கு மேல் நீங்கள் அதை யூஸ் செய்யவே கூடாது.

 ஆனந்த் சீனிவாசன் விளக்கம் கிரெடிட் கார்டு அடுத்து கிரெடிட் கார்டில் கடன் இருந்தால் எப்போதும் வெறும் வட்டியை மட்டும் கட்ட கூடாது. மனைவி, சகோதரி, அம்மா அப்படி இல்லை என்றால் நண்பர்களிடமாவது தங்கத்தை வாங்கி, அதை வங்கியில் வைத்து கடனை முடியுங்கள். கையோடு கிரெடிட் கார்டையும் முதல் நாளே க்ளோஸ் செய்துவிடுங்கள்.

பிறகு தங்கத்திற்கான கடனை இஎம்ஐ ஆகக் கட்டி முடியுங்கள். இது தான் கிரெடிட் கார்ட் லோனை முடிப்பதற்கான வழி! லோன்கள் பர்சனல் லோன் இருந்தால் அதை accelerated payment modeல் கட்டி முடிக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு மாதமும் கூடுதல் இஎம்ஐ தொகையைக் கட்டி முடிக்க வேண்டும். ஹோம் லோன் இருந்தால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக இரண்டு அல்லது இஎம்ஐகளை கட்டுங்கள். சில தனியார் வங்கிகள் இதை ஏற்க மாட்டார்கள். அப்படி உங்கள் வங்கி சொன்னால் லோனை தனியார் வங்கியில் இருந்து அரசு வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம். அங்கு கையில் கூடுதலாக ரூ.1000 இருந்தால் கூட அதையும் கூட்டிக் கொள்ளலாம். இதன் மூலம் வேகமாக லோனை முடிக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை தயவு செஞ்சு வீடு வாங்க வேண்டாம்.. கடந்தாண்டே இந்தியால் குறைவான எண்ணிக்கையிலேயே வீடுகள் விற்றுள்ளன. தற்போதைய சூழலில் வீடு வாங்காமல் இருப்பதே சரியாக இருக்கும். அதிலும் குறிப்பாக லோன் போட்டு வீட்டை வாங்கவே வாங்காதீர்கள். வீடு இல்லையென்றால் ஒன்றும் ஆகிவிடாது.  பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டாலே விலை பயங்கரமா குறையும்? ஆனந்த் சீனிவாசன் தந்த விளக்கம் கிரெடிட் கார்டு தான் ரொம்ப ஆபத்து சிலர் கிரெடிட் கார்டு பில்லை எப்போதும் சரியாகக் கட்டுவேன் என்பார்கள். சரியாக யூஸ் செய்தாலும் கூட வேண்டாம்.. நான் கிரெடிட் கார்டு யூஸ் செய்ததே இல்லை. அவ்வளவு ஏன் பர்ஸ் கூட வைத்திருக்க மாட்டேன்.

வேண்டும் என்றால் செல்போனை வைத்து யுபிஐ மூலம் பணத்தைக் கட்டிக் கொள்ளலாம். வங்கியில் ரூ.2000- 5000 வைத்துக் கொள்ளுங்கள். வெளியே போனால் செலவுக்கு அதை யூஸ் செய்து கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு ரிவார்ட் கிடைக்கும் எனச் சிலர் சொல்வார்கள். ஆனால், அது பல நாள் திருடன் ஒரு நாள் ஆகப்படுவான் என்பது போலத் தான். என்றாவது ஒரு நாள் மாட்டுவான்.. பல மாதங்கள் ஒழுங்காகக் கட்டினாலும் ஒரு நாள் மாட்டினால் மொத்தமாகப் போய்விடும். எனவே, எவ்வளவு முறையாகக் கட்டுவேன் எனச் சொன்னாலும் அது வேண்டாம்.