3-வது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி!
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 36.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 38, ஜான் கேம்பல் 26, ஹாரி பியர் 22, ஷெர்பேன் ரூதர்போர்டு 19, அக்கீம் அகஸ்டே 17, கேப்டன் ஷாய் ஹோப் 16 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்களையும் ஜேக்கப் டஃபி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.