டிச. 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

டிச. 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச. 10ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் சட்ட விதிகளின்படி வரும் டிச. 10ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.