நிலவில் 2036-க்குள் அணுமின் நிலையம்... ரஷ்யா தீவிரம்
நிலவில் 2036-ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மாஸ், அந்நாட்டின் 2 அணுமின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ரஷ்யாவும், சீனாவும் நிலவில் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. அந்த நிலையத்திற்கு தேவையான மின்சாரத்திற்காக அணுமின் நிலையத்தை அமைக்க ரஷ்யா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், அமெரிக்காவும் நிலவில் 2030-க்குள் அணுமின் நிலையத்தை அமைக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. பிற நாடுகளுக்கு முன்பு, அங்கு முதல்நாடாக அணுமின் நிலையத்தை அமைக்க அமெரிக்கா முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
1961ம் ஆண்டில் முன்னாள் சோவியத் யூனியன் (தற்போதைய ரஷ்யா) நாடே நிலவில் முதல்முறையாக விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.