ஆல்-ரவுண்டராக அசத்திய தீப்தி சர்மா; கவுரவித்த பிசிசிஐ - வைரலாகும் காணொளி!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் கலக்கிய தீப்டி சர்மாவுக்கு, இந்த ஆட்டத்தின் சிறந்த ஃபீலடருக்கான பிசிசிஐ விருதானது வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் மிடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 46 ரன்களையும், ரிச்சா கோஷ் 35 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் டையான பெய்க் 4 விக்கெட்டுகளையும், சதியா இக்பால் மற்றும் ஃபாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணியில் சித்ரா அமீனைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.
இதில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 81 ரன்களையும், நடாலியா பெர்வைஸ் 33 ரன்களையும் சேர்த்தனர். இதனால் பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பி தீப்தி சர்மா, கிராந்தி கௌத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக தங்களின் 12ஆவது வெற்றியைப் பதிவு செய்து, 12-0 என்ற கணக்கில் தங்கள் ஆதிக்கத்தையும் தொடர்ந்து வருகிறது. மேலும் இந்திய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கிராந்தி கௌத் ஆட்டாநாயகி விருதை வென்றார்.
இந்த நிலையில், இப்போட்டிக்கு முடிவுக்கு பிறகு டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அந்நிகழ்வின் போது பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மாவுக்கு, இந்த ஆட்டத்தின் சிறந்த வீரருக்கான பதக்கமானது வழங்கப்பட்டது. மேலும் இதனை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் முனிஷ் பாலி வழங்கினார்.
இந்த போட்டியில் தீப்தி சர்மா பேட்டிங்கில் 25 ரன்களையும், பந்துவீசில் 3 விக்கெட்டுகளையும், ஃபில்டிங்கி ஒரு கேட்ச் மற்றும் ஒரு அவுட்டையும் சேர்த்திருந்தார். இதன் காரணமாக தீப்தி சர்மாவுக்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதானது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த வீடியோவையும் பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோவானது தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.