காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்தது

காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்தது

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலு குறைந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்கோ புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பிறகு அது படிப்படியாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலு குறைந்து விட்டது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நேற்று (03-12-2025) வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 1730 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில்,  காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (04-12-2025) காலை 0830 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பால், இனி படிப்படியாக மழை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.