சென்னையை அடுத்த மணலி புதுநகரில் கடந்த 24 மணி நேரத்தில் 24 செ.மீ. மழை கொட்டி தீர்த்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
டிட்கோ புயல், காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகியவற்றால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. பல பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் மழை கொட்டித் தீர்த்தது. இதுகுறித்து சென்னை வானிலை மைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. தமிழகத்தில் அநேக இடங்களில் (வடதமிழக கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும்), புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) 24,
எண்ணூர் AWS (திருவள்ளூர்) 21,
மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை) 20,
மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) 16,
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 15,
மண்டலம் 02 மணலி புதுநகரம் (W15) (சென்னை) 13,
மண்டலம் 02 மணலி (W19) (சென்னை) 12,
திண்டிவனம் (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 02 மணலி (W21) (சென்னை) தலா 11,
பொன்னேரி (திருவள்ளூர்) 10,
சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 02 மணலி (W17) (சென்னை), மண்டலம் 02 மணலி (W18) (சென்னை) தலா 9, கங்கவல்லி (சேலம்) 8,
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), புழல் ARG (திருவள்ளூர்), தழுதலை (பெரம்பலூர்), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) தலா 7,
DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), விழுப்புரம் (விழுப்புரம்), மண்டலம் 03 புழல் (சென்னை), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), பெரியகுளம் PTO (தேனி) தலா 6,
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மண்டலம் 05 பேசின்ப்ரிட்ஜ் (சென்னை), தோகமலை (கரூர்), பெரம்பூர் (சென்னை), பஞ்சப்பட்டி (கரூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), பெரியகுளம் (தேனி), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்), வேப்பந்தட்டை ARG (பெரம்பலூர்) தலா 5.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் சென்னை வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.