25 ஏக்கர் நிலம் இருந்தாலே பல்கலைக்கழகம் தொடங்கலாம்

25 ஏக்கர் நிலம் இருந்தாலே பல்கலைக்கழகம் தொடங்கலாம்

தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவும் வகையில், நில அளவு உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் புதிதாக நிறுவுவது தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் நேற்று அறிமுகம் செய்தார். சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. மாணவர் நலனுக்காகவும், உயர்கல்வியை மேம்படுத்தவும், தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான கொள்கை நெறிகளை எளிமைப்படுத்த சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது.

தனியார் பல்கலைக்கழகத்துக்கு, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம், மாநகராட்சிக்குள் வந்தால் 25 ஏக்கருக்கு குறையாமலும், நகராட்சி அல்லது பேரூராட்சிக்குள் இருந்தால் 35 ஏக்கருக்கு குறையாமலும், பிற இடங்களுக்குள் வந்தால் 50 ஏக்கருக்கு குறையாமல் தொடர்ச்சியான நிலமாக இருக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.