தொழிலாளர் நல ஆணையரகம் அண்ணா நகருக்கு இடமாற்றம்: நவ.10 முதல் புதிய இடத்தில் செயல்படும்
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வந்த தொழிலாளர் நல ஆணையரகம், அண்ணாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் நல ஆணையரகம் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களுக்கு அண்ணா நகர் 6-வது நிழற்சாலை, தொழிலாளர் அலுவலர் குடியிருப்பு வளாகம் பி-பிளாக்கில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அக்கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆக. 25-ம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம், கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தொழிலாளர் இணை ஆணையர்-1 அலுவலகம், தொழிலாளர் இணை ஆணையர்-2 அலுவலகம் ஆகியவை அண்ணா நகர் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன. அந்த அலுவலகங்கள் வரும் 10-ம் தேதி முதல் புதிய இடத்தில் செயல்படும்.