கொல்லிமலை மலைவாழ் மக்கள் கொண்டாடிய சேர்வை ஆட்டம்
உழவுத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொல்லிமலை மலைவாழ் மக்கள் தங்களுடைய பாரம்பரிய முறையை பின்பற்றி மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
நாமக்கல்:கொல்லிமலை பாரம்பரிய உடைகள் அணிந்து கொல்லிமலை மலைவாழ் மக்கள் கொண்டாடிய சேர்வை ஆட்டம்.
வீடு வீடாக காளை மாடுகளை அழைத்து வந்து பாத பூஜை செய்து வணங்கும் நிகழ்ச்சி. உழவுத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொல்லிமலை மலைவாழ் மக்கள் தங்களுடைய பாரம்பரிய முறையை பின்பற்றி மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை முக்கிய ஆண்மீக சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. கொல்லிமலையில் 14 பஞ்சாயத்து ஊராட்சிகளும் 248 கிராமங்களில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறனர்.
கொல்லிமலையில் பொங்கல் தினம் தொடங்கி மூன்று நாள் சேர்வை ஆட்டம், ஆண்டி கொலத்தான் ஆட்டம், போன்ற பல்வேறு பாரம்பரிய விசேஷங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது... இதில் ஒரு பகுதியாக வளப்பூர் நாட்டில் பாரம்பரிய சேர்வையாட்டம் தங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக இதில் ராமர் பாதம் பட்டம் என்ற காளை மாடு பெருமாள் குடி சேர்ந்த இந்த காளை மாட்டை வீடு வீடாக பாதம் கழுவி வணங்கி வருகின்றனர் கொல்லிமலை மலை வாழ் மக்கள். இந்த சேர்வையாட்டம் என்பது மூன்று நாட்கள் கொல்லிமலையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.