17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை: ஏரல் அருகே பாதிரியார் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
ஏரல் பகுதியில் புனித ஒத்தாசை மாதா தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பங்குத்தந்தையாக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம் (69). இந்த ஆலயத்தில் மாணவ, மாணவிகளுக்கு கீ போர்டு, பாடல், நடனம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், பாதிரியார் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.