சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை!

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை!

சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

எங்கெல்லாம் சோதனை? சென்னை சவுகார்பேட்டை கந்தப்ப முதலி தெருவில் உள்ள பவர்லால் முத்தா என்ற தொழிலதிபர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

எம்ஜிஆர் நகர், அண்ணா பிரதான சாலையில் உள்ள ஒரு முகவரியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, அம்பத்தூர் திருவேங்கட நகர் ஆர்க் டெக் ரெசிடென்சி என்ற முகவரியில் வழக்கறிஞர் பிரகாஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.