“கதாபாத்திரங்கள் கற்பனையே!” - ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ படக்குழு வெளியிட்ட எச்சரிக்கை!

“கதாபாத்திரங்கள் கற்பனையே!” - ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ படக்குழு வெளியிட்ட எச்சரிக்கை!

ரவி மோகன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கராத்தே பாபு’ படக்குழு டீசர் அப்டேட் கொடுத்துள்ளது. அத்துடன் எச்சரிக்கையுடன் கூடிய பதிவையும் வெளியிட்டுள்ளது.

ரவி மோகன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கராத்தே பாபு’ படக்குழு டீசர் அப்டேட் கொடுத்துள்ளது. அத்துடன் எச்சரிக்கையுடன் கூடிய பதிவையும் வெளியிட்டுள்ளது.
ரவி மோகன் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘பராசக்தி’. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகும் படம் ‘கராத்தே பாபு’. கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், சக்தி வாசுதேவன், விடிவி கணேஷ் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் டீசர் நாளை (ஜன.24) காலை 11 மணிக்கு வெளியாகுமெனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.