"அத்துமீறி தொட முயன்ற 'பான் - இந்தியா' ஹீரோ.. கன்னத்தில் அறைந்தேன்" - பூஜா ஹெக்டே சொன்னதாக பரவும் தகவல்

'பான் - இந்தியா' படத்தின் ஹீரோ தன்னை அத்துமீறி தொட முயன்றதாக முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே பெயரில் பரவி வரும் தகவலில் உண்மை என்ன?.

"அத்துமீறி தொட முயன்ற 'பான் - இந்தியா' ஹீரோ.. கன்னத்தில் அறைந்தேன்" - பூஜா ஹெக்டே சொன்னதாக பரவும் தகவல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்தில் நடித்த பூஜா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தில் 'மோனிகா' பாடலுக்கு ஆடியிருந்தார். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படி, பூஜா ஹெக்டே தற்போதைய நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் தான் பூஜா ஹெக்டே கூறியதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதில், "ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய பான் இந்திய திரைப்படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி என் கேரவனில் நுழைந்து, அத்துமீறி என்னை தொட முயன்றார். நான் உடனே அவரை அறைந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பின் அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை" என்று பூஜா ஹெக்டே கூறியதாக ஒரு தகவல் உலா வருகிறது.

 தெலுங்கு சினிமாவில் பூஜா ஹெக்டே தொட்டதெல்லாம் பொன்னானது. இதனால், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் கம்பேக் கொடுத்தார். இதில் இடம்பெற்ற "அரபிக் குத்து" பாடல் உலக அளவில் பிரபலமானது. இதன்பின் பூஜாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஆனால் அந்த ஹீரோவின் பெயரை குறிப்பிடாமல் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சினிமா குறித்த தகவல்களை வெளியிடும் ரமேஷ் பாலா, "பூஜா ஹெக்டே கொடுத்ததாக கூறப்படும் நேர்காணல் 100% போலியானது. தவறான உள்ளடக்கத்தைப் பகிர வேண்டாம்!" என்று பதிவிட்டுள்ளார்.