“ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க வேண்டும் என்ற ஐடியா வந்துள்ளது” - நடிகர் ஜீவா விருப்பம்

“ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க வேண்டும் என்ற ஐடியா வந்துள்ளது” - நடிகர் ஜீவா விருப்பம்
“ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க வேண்டும் என்று ஒரு ஐடியா உள்ளது. ஜல்லிக்கட்டை பார்த்த பின்பு இயக்குநருக்கும் ஒரு ஐடியா கிடைத்துள்ளது.” என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பார்வையிட்ட நடிகர் ஜீவா செய்தியாளர்களிடம் கூறுகையில், “‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ஷூட்டிங் பாண்டி கோவிலில் தான் கிடா வெட்டி, மீனாட்சியம்மன் கோவிலில் பூஜை செய்து தொடங்கினோம். முதல் முறை ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து வியந்து போயுள்ளேன். மதுரை மக்களின் அன்பும் பாசம் மகிழ்ச்சியாக உள்ளது. ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் காஸ்டியூம் முழுக்க வேஷ்டி சட்டையில் உள்ளதால் பாலமேட்டில் உள்ள ஒரு கடையில் வாங்கி அணிந்து கொண்டேன்.
மதுரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலே மதுரை என்று தான் சொல்வார்கள். எங்க அம்மா கொடைக்கானல், பாட்டி பெரியகுளம். அதனால் நானும் மதுரைக்காரன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன். மதுரைக்கு எனக்கு புதுசு இல்லை, தெனாவெட்டு என்று ஒரு படமே நடித்துள்ளேன். அதில் "தப்புண்ணே" என்று ஒரு டயலாக் இருக்கும். அப்போது அந்த டயலாக் டிரெண்ட் ஆனது.
ஜல்லிக்கட்டு வீரராக நடிக்க வேண்டும் என்று ஒரு ஐடியா உள்ளது. ஜல்லிக்கட்டை பார்த்த பின்பு இயக்குநருக்கும் ஒரு ஐடியா கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து செல்வதால் இன்று இரவு பெயின்டிங் செய்தது போல் ஒரு கனவு வரும் எனக்கு. மதுரைக்கு வந்தது மறக்க முடியாத நாளாகவும், மறக்க முடியாத பொங்கலாகவும் உள்ளது.” என்றார்.