வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் - தலிபான்களுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கையா?
ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும் டிடிபி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் டிடிபி அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தப்போவதாகவும், ஜனவரி 23-க்குள் திரா பகுதியை விட்டு வெளியேறுமாறும் மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் ஒரு மாதம் முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறும்போது, “திரா நகரில் எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. மாறாக அங்கு நிலவும் கடும் குளிரே மக்களின் இடப்பெயர்ச்சிக்குக் காரணம்” என்றார்.