டிசம்பர் 15-ல் ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம்?

டிசம்பர் 15-ல் ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம்?

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் எதிவரும் டிசம்பர் 15ஆம் தேதி நடத்தபடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் டி20 கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்ற தகவல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. ஏனெனில் ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்கவைக்கும், எந்தெந்த வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மினி ஏலம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின் படி, ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் எதிவரும் டிசம்பர் 15ஆம் தேதி நடத்தபடும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நவம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை சமர்பிக்கும் படி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மேலும், இந்த ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் முன்னதாக வளைகுடா நாடுகளில் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய தகவல்களின் படி இந்த ஏலாம் இந்தியாவில் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஏலாமானது எங்கு நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஏலம் துபாயிலும், 2024ஆம் ஆண்டிற்கான ஏலம் ஜெட்டாவிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.