கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஜோகோவிச் 400-வது வெற்றி!
ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீரரும் 10 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் போட்டிக் வான் டி சாண்ட்ஸ்கல்பை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஜோகோவிச்சின் 400-வது வெற்றியாக இது அமைந்தது.
இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் 400-வது வெற்றியை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜோகோவிச். மேலும் ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் இதுவரை அவர், 102 வெற்றிகளையும், 10 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் சாதனையையும் ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.