டெம்பா பவுமாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் - சுனில் கவாஸ்கர் அட்வைஸ்
இந்திய பேட்டர்கள் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்ப பவுமாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் உள்ள பர்சபார கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென்னாப்பிரிக்க அணி ஏற்கெனவே வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற அழுத்தத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. முன்னதாக கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஃபிட்ச் தான் என்றும் சிலர் விமரித்து வருகின்றனர்.
அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா சிறப்பாக செயல்பட்டதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். இந்த போட்டியில் அரைசதத்தை எட்டிய ஒரே வீரரும் அவர் தான் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இந்நிலையில், இந்திய பேட்டர்கள் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்ப பவுமாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவிடமிருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அவர் தனது நல்ல நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிலைத்து நின்றார். இந்திய அணி பேட்ஸ்மேன்களும் இதேபோல் விளையாடியிருக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பிட்ச் குறித்து பேசிய அவர், "ஐபிஎல் தொடரின் போது, எந்த அணியும் பிட்ச் குறித்த விஷயங்களில் தலையிடுவதில்லை. அதனால் பிட்ச் மேர்ப்பார்வையாளர் தங்களின் கடமைகளை எந்தவிட அழுத்தமும் இன்று செயவதுடன், அவர்க எப்படி நினைக்கிறார்களோ அதற்கேற்றவாறு பிச்ட்களை உருவாக்கி வருகின்றனர். ஏனெனில் ஆட்டுகளத்தில் செயல்பாடுகளை மற்றவர்களைக் காட்டிலும் பிட்ச் மேற்பார்வையாளருக்கு நன்கு தெரியும்.
அதனால் அவர்களின் செயல்பாடுகளில் யாரும் தலையிடக்கூடாது. அதனைவிட்டு, தாங்கள் விரும்பும் வகையில் பிட்சுகளை தயார் செய்தால், அது தோல்விக்கு தான் வழிவகுக்கும். அதனால் பிட்ச் மேற்பார்வையாளர்களை சுந்ததிரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். சுனில் கவாஸ்கரின் இக்கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.