விஜய்யால் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: மு.வீரபாண்டியன் கருத்து
“இந்தத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், திமுக கூட்டணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பிஹார் தேர்தலில் வாக்கு திருட்டு, தேர்தல் விதிமீறல்கள் நடந்துள்ளன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் கைகோத்துள்ளன. எஸ்ஐஆர் பணியை வருவாய் துறை அலுவலர்கள் புறக்கணித்து இருப்பதும், பழைய ஓய்வூதியம் வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ போராட்டம் அறிவித்துள்ளதும் நியாயமானதுதான். இதேபோல, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.