உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி: ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்
உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியைக் காண ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவுள்ளது.
சென்னை, மதுரையில் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. ஜூனியர் உலக கோப்பையில் அதிக அணிகளும், அதிக போட்டிகளும் நடைபெறும் தொடராக இது அமைந்துள்ளது.
https://ticketgenie.in/ என்ற இணைய தளம் அல்லது ஹாக்கி இந்தியா செல்போன் செயலி மூலம் ரசிகர்கள் இலவச டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.