இந்த வாகனங்களுக்கு எல்லாம் உயர் பாதுகாப்பு பதிவு கட்டாயமில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு
2019 ஏப்ரல் மாதத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு வாகனப் பதிவு எண் பொறுத்துவது கட்டாயமில்லை என சென்னை உய ர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய மோட்டார் வாகன பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை (high security registration plate) பொருத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தவில்லை. அதனால், தமிழ்நாடு அரசுக்கு உயர் பாதுகாப்பு வாகன பதிவின் பலகை பொருத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில ஆஜரான வழக்கறிஞர், இது மத்திய அரசினுடைய கொள்கை முடிவு. ஏற்கனவே, உச்சநீதிமன்றம் உத்தரவில் உயர் பாதுகாப்பு வாகன பதிவின் பலகை பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களில் ஈடுபடும் வானங்களை அடையாளம் காணவும், குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களை இதனை பயன்படுத்தி தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தவொரு சட்ட உத்தரவும் இல்லாத நிலையில், மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் 2019க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இதனை நடைமுறைப்படுத்த மாநிலத்திற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. குறிப்பிட்ட மோட்டார் வாகன சட்டம் கட்டாயமாக்கப்படவில்லை என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.