காஷ்மீரில் தமிழக வீரர் வீரமரணம்... அன்புமணி இரங்கல்

காஷ்மீரில் தமிழக வீரர் வீரமரணம்... அன்புமணி இரங்கல்

காஷ்மீரில் நடந்த சண்டையில் பலியான தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:

காஷ்மீர் மாநிலத்தில்  இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த  சத்துரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த  இராணுவ வீரர் சக்திவேல்,  பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரச்சாவு அடைந்தார் என்ற செய்தியறிந்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தாய்நாட்டைக் காக்கும் பணியில் பயங்கரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர் சக்தி வேல் அவர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன்.

உயிர்த்தியாகம் செய்துள்ள வீரரின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு அவரது  குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவியை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.