சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.மேலும், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
5இதற்கிடையே, சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.