இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை; வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைவு
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமுமின்றி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்பு இந்தியர்களின் சேமிப்பாக மட்டுமே பார்க்கப்பட்ட தங்கம், இப்போது உலகளவில் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு பொருளாதார நிலையற்ற தன்மை, பாதுகாப்பான முதலீட்டின் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது, பணத்தின் மதிப்பு குறைப்பு போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
தீபாவளிக்கு முன்பு வரை தொடர் விலையேற்றம் கண்டுவந்த தங்கமானது அதிகபட்சமாக ரூ. 97 ஆயிரத்தை நெருங்கியது. அதன்பிறகு சற்று சரிந்து, ரூ.89 ஆயிரம் வரை சென்றது. இதனால் தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்விதமாக கடந்த சில நாட்களில் மடமடவென அதிகரித்து மீண்டும் ரூ. 96 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
தங்கம் விலை
கடந்த சனிக்கிழமை (டிச.6) ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 12,040 என்ற கணக்கில், ஒரு சவரன் ரூ. 96,320க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையேற்றம் இல்லாத காரணத்தால் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் எந்தவித மாற்றமுமின்றி ஒரு சவரன் ரூ. 96,320க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பது ஏன்?
ரஷ்யா - அமெரிக்க பிரச்சினை, சீனா - இந்தியா மீது அமெரிக்க வரி விதிப்பு, உலக நாடுகளிடையேயான போர் பதற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ. 71 ஆயிரத்தில் இருந்த ஆபரண தங்கத்தின் விலையானது ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட ரூ. 25 ஆயிரம் அதிகரித்திருக்கிறது. இதனால் தங்கத்தின்மீது முதலீடு குறைந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. சாமானியர்களுக்கு வேண்டுமானால் தங்கம் வாங்குவது ஒரு கனவாக மாறிவிட்டாலும், மேல்தட்டு மக்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துக்கொண்டேதான் போகின்றனர்.
ஏனென்றால், இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டேதான் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதுதான் அதற்கு காரணம்.
முன்னொரு காலத்தில் நாணயங்களை தயாரிக்க தங்க உலோகத்தை பயன்படுத்தினர். ஆனால் இயற்கையாக கிடைக்கக்கூடிய அரியவகை உலோகங்களில் ஒன்று என்பதாலும், மிக குறைந்த அளவிலேயே கிடைப்பதாலும் தங்கத்தின் மதிப்பும் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.