டி20 போட்டி: மீண்டும் திரும்பும் ஹர்திக் பாண்டியா

டி20 போட்டி: மீண்டும் திரும்பும் ஹர்திக் பாண்டியா

தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் போட்டித் தொடரை தொடர்ந்து, தெ.ஆப்பிரிக்காவும், இந்தியாவும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இந்த போட்டித் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள், ராய்ப்பூரில் இன்று (டிச.3) தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அப்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கழுத்து காயம் காரணமாக அவதிப்படும் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

2 அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி, 6ம் தேதியும், 2வது டி20 போட்டி 11-ம் தேதியும், 3வது டி20 போட்டி 14-ம் தேதியும், 4வது டி20 போட்டி 17-ம் தேதியும், 5வது டி20 போட்டி 19-ம் தேதியும் நடைபெறவுள்ளன.