அரசு மருத்துவர்கள் 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

அரசு மருத்துவர்கள்   48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 48 மணி நேரம் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட அரசு மருத்​து​வர்​கள், கோரிக்​கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறி​வித்​துள்​ளனர்.

தமிழக அரசு மருத்​து​வர்​களுக்​குக் கருணாநிதி ஆட்​சிக்காலத்​தில் கொண்டு வரப்​பட்ட அரசாணை 354-ன்​படி, ஊதிய உயர்வு மற்​றும் பதவி உயர்வை உடனடி​யாக வழங்க வேண்​டும்.

ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்கு அறிவிக்​கப்​பட்ட ரூ.3,000 ஊக்​கத்​தொகையை நிலு​வை​யின்றி வழங்க வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு மருத்​து​வர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், இந்த கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை வளாகத்​தில், அரசு டாக்​டர்​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர், 48 மணி நேர உண்​ணா​விரதப் போ​ராட்​டத்தை நேற்று முன்​தினம் தொடங்​கினர்.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மற்​றும் செயலர் ஆகியோர் மருத்​து​வர்​களு​டன் சமரசப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இருப்​பினும் கோரிக்​கைகள் தொடர்​பாகத் தெளி​வான வாக்​குறு​தி​கள் அளிக்​கப்​ப​டாத​தால், மருத்​து​வர்​கள் தங்​கள் போராட்​டத்தை தொடர்ந்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் பால​கிருஷ்ணன் மற்​றும் ராமலிங்​கம் ஆகியோர் கூறிய​தாவது: இன்று காலை உண்​ணா​விரதம் நிறைவடைந்​தா​லும், கோரிக்​கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது. அடுத்த ஒரு வார காலத்​துக்கு பயோமெட்​ரிக் வரு​கைப் பதிவேட்டை பயன்​படுத்​தப் போவ​தில்​லை.

அரசு சார்ந்த முக்​கியக் கூட்​டங்​கள் மற்​றும் அலு​வல் ரீதி​யான வாட்​ஸ்​-அப் குழுக்​களில் இருந்து மருத்​து​வர்​கள் வெளி​யேறித் தங்​கள் எதிர்ப்​பைப் பதிவு செய்​வார்​கள். இந்த ஒரு வார காலப் போராட்​டத்​துக்​குப் பிறகும் அரசு செவி​சாய்க்​க​வில்லை எனில், மாநிலம் தழு​விய அளவில் போ​ராட்​டத்​தைத் தீவிரப்​படுத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளோம்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.