ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?

ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?

கடந்த ஒருவார காலமாக ரூ.87 ஆயிரத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு கிராம் ரூ.88 ஆயிரத்தை தாண்டி வரலாற்றின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை தாண்டி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கங்களுடன் இருந்த வந்த தங்கம் விலை, கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து, அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை, ஒரே நாளில் அதிரடியாக இரண்டு முறை உயர்ந்து கடந்த ஒரு வார காலமாக ரூ.87 ஆயிரத்தில் நீடித்து வந்தது.

நேற்று முன்தினம், தங்கத்தின் விலை கிராமுக்கு 50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,950-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞயிற்றுக்கிழமையையொட்டி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடித்தது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (அக்.6) அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,060க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.88,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை தாண்டியது. அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.12,065-க்கும், சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.96,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வரலாற்றின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தொடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.