சையத் மோடி பாட்மிண்டன்: உன்னதி, கிடாம்பி வெற்றி!
சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் அரை இறுதியில் விளையாட இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் லக்னோவில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் தன்வி சர்மா 21-13, 21-19 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை லோ சின் யான் ஹாப்பியை வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-15, 13-21, 21-16 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த ரக்சிதா சந்தோஷை சாய்த்தார்.