பணகுடியில் கிரிக்கெட் போட்டி: அதிமுக EX எம்பி பரிசளிப்பு

பணகுடியில் கிரிக்கெட் போட்டி: அதிமுக EX எம்பி பரிசளிப்பு
பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிமுக முன்னாள் எம்பி சௌந்தரராஜன் பரிசுகள் வழங்கினார்.
வள்ளியூர் வடக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் லெப்பை குடியிருப்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் L.ஜெரால்ட் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்பியும், அதிமுக மாவட்ட கழகப் பொருளாளருமான சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் பரிசை பெற்ற அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
முதல் பரிசை தட்டிச் சென்ற  லெப்பை குடியிருப்பு அணிக்கு சௌந்தரராஜன்  பரிசு வழங்கி அணி வீரர்களை வாழ்த்தினார். 2-வது பரிசு பெற்ற கண்ணன் குளம் அணிக்கு வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பால் துரை பரிசு வழங்கினார். 3வது பரிசு பெற்ற சிதம்பராபுரம் அணிக்கு நெல்லை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்  ராஜா பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் லாசர்,வள்ளியூர் முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் N.G.சண்முக பாண்டியன்,மாவட்ட MGR மன்ற துணை செயலாளர் பிரேம்குமார், முன்னாள் பணகுடி நகர செயலாளர்  ஜெய்னுலாபதின், பணகுடி நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜஸ்டின், ஒன்றிய ஐடி விங் தலைவர் தீபக் நாகதுரை, கிளை கழக செயலாளர்கள் செந்தில்குமார், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த punnagaiseithi.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.