பெண்ணுரிமைக்காக முழங்கும் கர்ஜனை மொழி!. கனிமொழிக்கு முதல்வர் வாழ்த்து!.

பெண்ணுரிமைக்காக முழங்கும் கர்ஜனை மொழி!. கனிமொழிக்கு முதல்வர் வாழ்த்து!.

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கனிமொழி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்தநிலையில், கனிமொழிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர்,  நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! என பதிவிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேபோல், தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 நாட்கள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள அமித்ஷா கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.