சமையல் சிலிண்டர் விலை குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?

சமையல் சிலிண்டர் விலை குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் மானியமில்லா சமையல் சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் 1-ம் தேதி சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருவது வழக்கமாகும். அதன்படி, டிசம்பர் 1-ம் தேதியான இன்று அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன.

19 கிலோ எடை கொண்ட மானியமில்லா சமையல் சிலிண்டர் விலை ரூ.10.50 குறைக்கப்பட்டு, ரூ.1739.50க்கு விற்கப்படுகிறது. நேற்று வரை அந்த சிலிண்டர் விலை ரூ.1750ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை. சென்னையில் அந்த சிலிண்டர் விலை தொடர்ந்து ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.