71 மாவட்ட தலைவர்கள் 'திடீர்' மாற்றம் - அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்

71 மாவட்ட தலைவர்கள் 'திடீர்' மாற்றம் - அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்

தமிழ்நாட்டில் 71 கட்சி மாவட்டங்களுக்கான காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை சில தலைவர்கள் முன் வைத்த நிலையில், காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் தனது பலத்தை காட்ட வேண்டிய காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதற்காக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாவட்ட தலைவர்களுக்கான தேர்வு நடத்தினர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் அடங்கிய பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் 71 கட்சி மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

அதே போல் மதுரை, திருச்சி, கடலூர், தருமபுரி, திண்டுகல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், நாமக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட கட்சி மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 77 காங்கிரஸ் கட்சி மாவட்டங்கள் உள்ள நிலையில் 71 கட்சி மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி மாவட்ட புதிய தலைவர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு