வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பாஜக எடுக்கும் தந்திர முயற்சி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பாஜக எடுக்கும் தந்திர முயற்சி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்!

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது பாஜகவின் தந்திர முயற்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

தி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிட கழக தலைவர் கி வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், தேமுதிக தலைமை நிலை செயலாளர் பார்த்திபன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிழ்முன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதகள் பங்கேற்றனர்.

நாதக, தவெக புறக்கணிப்பு: ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுக, நாதக, பாமக, தவெக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

அதேபோல், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு தமிழகம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். நேர்மையான தேர்தலை நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்குரிய கால அவகாசத்தை கொடுத்து, பதற்றமில்லாத சூழலில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

அப்போது தான் அந்த பணிகளை முறையாக செய்ய முடியும். மாறாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்தப் பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கு பாஜக எடுக்கும் தந்திரமான முயற்சியாகும். அதைதான் பீகாரில் செய்தார்கள். இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்க ஜனநாயக குரலைக் காக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட கட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.