வீட்டை விட்டு வெளியேறிய அண்ணாமலை.. அதிர்ச்சியில் குடும்பம்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜின் செயலால் அண்ணாமலை லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை வீட்டு செல்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய அண்ணாமலை.. அதிர்ச்சியில் குடும்பம்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சொத்தை பிரிக்க வக்கீலை அழைத்து வந்த அண்ணாமலை சொத்தை 4 பங்காக பிரிக்க சொல்கிறார்.

இதற்கு மொத்த குடும்பமும் மறுப்பு தெரிவிக்க, மனோஜ் மட்டும் சீக்கிரம் பண்ணுங்க என்று சொல்கிறார். மேலும் விஜயாவோ என் வீடு என் பெயரிலேயே இருக்கட்டும். கடைசி காலத்தில் என்னை இவங்க வீட்டை விட்டு துரத்துறதுக்கா என்று கேட்கிறார்.

உடனே அண்ணாமலை உங்க அப்பா கொடுத்த வீடு உன் பேரிலேயே இருக்கட்டும். நான் என் ஊரில் இருக்கும் சொத்தை மட்டும் தான் 4 பங்காக பிரிக்க போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு வக்கீலோ இதில் சட்ட சிக்கல் உள்ளது அனைவரும் ஒத்து போனால் தான் சொத்தை பிரிக்க முடியும் என்று கூறுகிறார்.

உடனே மனோஜும் முத்துவும் சண்டையிடவே, கடுப்பான அண்ணாமலை முத்து என்று கோபமாக அழைக்கிறார். பிறகு மனம் நொந்தபடி, முத்துவை பிள்ளையை பெத்தா கண்ணீரு என்ற பாடலை பாட சொல்லி வறுத்தப்படுகிறார். வக்கிலோ குடும்பமாக ஒரு முடிவை எடுத்துவிட்டு கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

மறுநாள் காலை காபி கொடுப்பதற்காக வெயிட் பண்ணிய மீனா, அண்ணாமலை ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என தேடுகிறார். விஜயாவோ அலட்சியமாக அதெல்லாம் வந்துவிடுவார் என்று கூறவே முத்து போன் செய்து பார்த்ததில் ஸ்விட்ச் ஆப் என்று வந்ததும் பதறுகின்றனர்.

அப்போது பூஜை அறையில் சாமி கும்பிட சென்ற மீனாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, அங்கு அண்ணாமலை லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டிருக்கிறார். அந்த லெட்டரில், என்னை யாரும் தேட வேண்டாம், நேரம் வரும் போது வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கடுப்பான விஜயா, மனோஜை கடுமையாக திட்டிவிட்டு அவரை எப்படியாவது வீட்டிற்கு கூட்டிட்டு வாங்க. இல்லனா நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என கூறுகிறார்.

பிறகு ரூமில் மனோஜும், ரோகிணியும் மாறி மாறி இந்த பிரச்சனைக்கு நீதான் காரணம் என கூறி கொள்கின்றனர். இருவருக்குமிடையே சண்டை உச்சத்திற்கு செல்லவே, இப்போ அங்கிளை காணோம் அதை பத்தி யோசிக்க மாட்டீயா என்று கேட்கவே, மனோஜ் போனவருக்கு வர தெரியும். சொத்து பிரிக்க கூடாதுனுதான் அவரு வீட்டை விட்டு போயிருக்கார் என்று அண்ணாமலையை பற்றி கவலையில்லாமல் பேசுகிறார்.

அண்ணாமலைக்கு எதுவும் ஆகிவிடுமா, வீட்டிற்கு திரும்பி விடுவாரா என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.