மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை : பிசியோதெரப்பிஸ்ட் கைது

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை : பிசியோதெரப்பிஸ்ட் கைது
சென்னை கொளத்தூரில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிசியோதெரப்பிஸ்ட் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி, வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்டர்ன்ஷிப்பிற்காக பெரம்பூரில் கார்த்திக் என்ற பிசியோதெரப்பிஸ்ட் நடத்தி வரும் மையத்தில் மாணவி சேர்ந்தார். இச்சூழலில் ஒருவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என மாணவியை கொளத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற பிசியோதெரப்பிஸ்ட் கார்த்திக், அப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் கொளத்தூர் மகளிர் காவல்நிலைய காவலர்கள் பிசியோதெரப்பிஸ்ட் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.