விஜய்க்கு வந்த சோதனை: கரூர் வழக்கு.. பிரசார வாகனம் பறிமுதல்.. சிபிஐ அதிரடி

விஜய்க்கு வந்த சோதனை: கரூர் வழக்கு.. பிரசார வாகனம் பறிமுதல்.. சிபிஐ அதிரடி

விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து  ஆய்வு செய்து வருகின்றனர்.

சிபிஐ பறிமுதல் செய்துள்ளதால் விஜய், இனி நீதிமன்றம் சென்றுதான் மீட்க முடியும் என கூறப்படுகிறது. வரும் 12 ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தநிலையில் இந்த நடவடிக்கை விஜய்க்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதைத் தொடர்ந்து ,  இந்த வழக்கை ,  சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 19-ந் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி தலைமையிலான குழுவினரும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் அதிகாரிகளும் அங்கு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர்.

விஜய்க்கு நாளை மறுநாள் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், இன்று விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சென்னையில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு பேருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், அந்த பேருந்தில் ஆய்வு நடைபெறுகிறது. பிரசார வாகன டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 விஜயின் பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள்  பறிமுதல் செய்துள்ளதால் விஜய், இனி நீதிமன்றம் சென்றுதான் மீட்க முடியும் என கூறப்படுகிறது. வரும் 12 ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.