இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது ஆஸி.,
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸி., அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மழையால் பலமுறை பாதிக்கப்பட்ட, பெர்த் போட்டியில் இந்தியா தோற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி சார்பில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். கில் 9 ரன்னில் ஏமாற்றமளித்தார். விராட் கோஹ்லியும் 4 பந்துகளை சந்தித்து ஒன் எடுக்காமல் அவுட்டானார்.
பிறகு ரோகித் சர்மாவும், ஸ்ரேயாஸ் ஐயரும் ரன்களை சேர்த்தனர். ரோகித் 73 ரன்களும், ஸ்ரேயாஸ் 61, அக்சர் படேல் 44 ரன்களுக்கு அவுட்டாகினர்.