சன்சார் சாத்தி செயலி.. மத்திய அரசு உத்தரவை ஆப்பிள் ஏற்க மறுப்பு

சன்சார் சாத்தி செயலி.. மத்திய அரசு உத்தரவை ஆப்பிள் ஏற்க மறுப்பு

சன்சார் சாத்தி செயலி தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ஆப்பிள் நிறுவனம் ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிநபர் தகவல் திருட்டு உள்ளிட்ட மோசடிகளை தவிர்க்கும் நோக்கில், செல்போன்களில் முன்கூட்டியே சன்சார் சாத்தி செயலியை பதிவேற்றம் செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டுமென ஆப்பிள் உள்ளிட்ட செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்பு துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டுமென ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில்,  மத்திய தொலைத் தொடர்பு துறையின் உத்தரவை ஆப்பிள் ஏற்க மறுத்து விட்டதாகவும், உலகின் எந்த நாட்டிலும் தாங்கள் இதுதொடர்பான உத்தரவை பின்பற்றுவதில்லை என ஆப்பிள் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்தோ, ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.