ஒன்பிளஸ் 15: ஏற்பாடுகள் தீவிரம்; டாப் லிஸ்டில் இடம்பிடிக்க தயாராகும் புதிய ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸ் 15 பிரீமியம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 13 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் ரக ஸ்மார்ட்போன்களாக, அதன் நேரடி எண் வரிசை மொபைல்கள் பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 13, 14 என நிறுவனம் முன்னதாக வெளியிட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
புதிதாக தற்போது ஒன்பிளஸ் 15 மாடல் ஸ்மார்ட்போனை களமிறக்க நிறுவனம் தயாராகி வருகிறது. ஒது தொடர்பாக சில தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
ஒன்பிளஸ் 15 அக்டோபர் 27 ஆம் தேதி சீனாவிலும், நவம்பர் 13 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 91 மொபைல்ஸ் அறிக்கையின்படி, அதாவது ஒன்பிளஸ் 15 நவம்பர் 13 ஆம் தேதி இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவத்தின் முதன்மையான சாம்சங் கேலக்சி எஸ்26 தொடருக்கு முன்பே இதன் அறிமுகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் 15 போனில் நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலீட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டைப் பயன்படுத்துகிறது. இது சமீபத்தில் வெளியான சக்திவாய்ந்த சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 15 போனில் 165Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் 6.78 அங்குல BOE X3 LTPO OLED பேனல் உள்ளது. திரை 1.5K தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. இதன் பொருள் ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவங்கள் இரண்டும் மிகவும் மென்மையாக இருக்கும். ஹார்ட்கோர் கேமர்கள் மற்றும் மல்டி டாஸ்கர்கள் இதில் இருந்து நல்ல செயல்திறனை எதிர்பார்க்கலாம்.
இந்த முறை, ஒன்பிளஸ் நிறுவனம் கேமராவிற்கான ஹாசல்பிளாட் பிராண்டிங்கை அகற்றி, அதன் சொந்த டீடைல் மேக்ஸ் எஞ்சினை அறிமுகப்படுத்தியுள்ளது.