பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை.. அசாமில் சட்டம் நிறைவேற்றம்!

பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை.. அசாமில் சட்டம் நிறைவேற்றம்!
பலதார திருமணம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் அசாம் மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
அசாமில் பலதார திருமணத்தை தடை செய்வதற்கான சட்டமசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் சட்டவிரோதமாக பலதார திருமணம் செய்வோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முந்தைய திருமணத்தை மறைப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இரு மடங்கு தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகள் இந்த சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.