தினமும் 20,000 பேருக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்

தினமும் 20,000 பேருக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்

பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் நாள்​தோறும் 20,000 பேருக்கு விற்​பனை செய்​யப்​படு​வ​தாக புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இதுகுறித்து புள்​ளி ​விவரங்​கள் கூறு​வ​தாவது: பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது முதற்​கொண்டு அதற்​கான தேவை அதி​கரித்து வரு​கிறது. நாள்​தோறும் புதி​தாக 20,000 பேர் இந்த பாஸை வாங்கி வரும் நிலை​யில் அதன் மொத்த பயனாளர் எண்​ணிக்கை தற்​போதைய நிலை​யில் 36.3 லட்​சத்தை எட்டியுள்ளது. அதன்​படி, 5 கார் பயனார்​களில் ஒரு​வர் இந்த வருடாந்​திர பாஸை பயன்​படுத்​துபவ​ராக உள்​ளார்.

பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் அறி​முகம் செய்​யப்​பட்ட வெறும் மூன்​றரை மாதங்​களில் இந்த சாதனை எட்​டப்​பட்​டுள்​ளது. பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் விலை ரூ.3,000 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் கார் வைத்​திருப்​பவர்​கள் ஆண்​டொன்​றுக்கு 200 முறை சுங்​கச்​சாவடிகளை கடந்து செல்ல முடி​யும். அப்படிப்பார்த்தால் தேசிய நெடுஞ்​சாலை​யில் ஒரு சுங்கச்சாவடியை கடந்து செல்​வதற்​கான கட்​ட​ணம் என்​பதும் மிகவும் குறை​வாக (ரூ.15) உள்​ளது. இவ்​வாறு புள்​ளி ​விவரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நகரங்​களுக்கு இடையே பயணிப்​பவர்​களுக்கு பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் அறி​முகம் செலவு குறைந்​த​தாக​வும், பயன்படுத்துவதற்கு எளி​தாக​வும் உள்​ளது. தரவு​களின்​படி சுங்கச்சாவடிகளை கடந்து செல்​லும் மொத்த கார்​களில் 40% வருடாந்​திர பாஸ் மூலமே கட்​ட​ணம் செலுத்​து​வ​தாக தெரிவிக்கப்பட்​டுள்​ளது. இது தேசி​ய அளவில்​ 22% சதவீத​மாக உள்ளது.