ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி

ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி

பீஹார் மாநிலம் பூர்னியா என்ற இடத்தில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். ரீல்ஸ் எடுக்க முயன்றபோது ரயில் மோதி 4 பேரும் பலியாகினர்.

பீகார் மாநிலம் பூர்னியாவில் வந்தே பாரத் ரயில் முன்பு ரீல்ஸ் எடுக்க 6 பேர் முயற்சி செய்தனர். அப்போது ரயில் மோதி 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், அதிகாலை 5:00 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.