அதிரடி காட்டும் தங்கம், வெள்ளி விலை: இன்றைக்கு எவ்வளவு தெரியுமா?

அதிரடி காட்டும் தங்கம், வெள்ளி விலை: இன்றைக்கு எவ்வளவு தெரியுமா?

 சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பங்குச் சந்தையில் ஏற்படும் திடீர் சரிவால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ய தொடங்கினர். இதன் விளைவாக, இந்தியப் பங்குச் சந்தை சரிவை சந்தித்து, தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத வகையில் உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, தீபாவளிக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. மேலும், டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டதால், தங்க ஆபரணங்கள் மீதான முதலீட்டை மக்கள் அதிகரித்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் (22 காரட்) சவரன் ரூ.91,200-க்கு விற்பனையானது. அதுவே, இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.11,500-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.92,000-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கட்டித் தங்கம் (24 காரட்) கிராமுக்கு ரூ.109 அதிகரித்து ரூ.12,546-க்கும், சவரனுக்கு ரூ.872 அதிகரித்து ரூ.1,00,368-க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.11,500

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.92,000

வெள்ளி 1 கிலோ - ரூ.1,73,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

தேதி கிராம் விலை சவரன் விலை
நவம்பர் 19 ரூ.11,500 ரூ.92,000
நவம்பர் 18 ரூ.11,400 ரூ.91,200
நவம்பர் 17 ரூ.11,540 ரூ.92,320
நவம்பர் 16 ரூ.11,550 ரூ.92,400
நவம்பர் 15 ரூ.11,550 ரூ.92,400
நவம்பர் 14 ரூ.11,740 ரூ.93,920
நவம்பர் 13 ரூ.11,900 ரூ.95,200
நவம்பர் 12 ரூ.11,600 ரூ.92,800
நவம்பர் 11 ரூ.11,700 ரூ.93,600
நவம்பர் 10 ரூ.11,480 ரூ.91,840
நவம்பர் 9 ரூ.11,300 ரூ.90,400

தங்கம் விலை இன்னும் ஏறுமா?

ஆண்டின் தொடக்கம் முதல் அதிகரித்து வந்த தங்கம் விலை, உச்சமாக அக்.17 ஆம் தேதி சவரன் 97,600 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தங்கம் விலை சரிய தொடங்கியது.

அதிகபட்சமாக, அக்டோபர் 24ஆம் தேதி சவரன் ரூ.91,200க்கு விற்பனையானது. பின்னர் நவம்பர் மாத தொடக்க வாரத்தில் தங்கம் விலை மெல்ல உயர்ந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து குறைந்த தங்கம் விலை, இன்று ரூ.800 அதிகரித்துள்ளது.