தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின.
கடந்த சனிக்கிழமை (ஜனவரி 03) காலையில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து காணப்பட்ட நிலையில், மாலையில், ரூ.640 அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.