தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணம் உண்மையா? பிரபல இயக்குநர் ஓப்பன் டாக்
தனுஷ், மிருணாள் தாக்கூர் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து பிரபல இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
42 வயதான தனுஷ் - 33 வயதான மிருணாள் தாக்கூரை வரும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வைரலாக பரவி வருகிறது. தனுஷ் - மிருணாள் திருமண யூகத்துக்கு காரணமாக அமைந்த விஷயம், மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ‘சன் ஆஃப் சர்தார்’ படத்தின் சிறப்பு திரையிடலின்போது நடிகர் தனுஷ் மும்பை சென்று அதில் கலந்துகொண்டார்.
அப்போது தனுஷ் - மிருணாள் தாக்கூர் இருவரும் கைகோர்த்து நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நிகழ்வில், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பேசிக்கொண்ட காட்சிகளும் கவனம் பெற்றன. அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவ தொடங்கின.

அடுத்து தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் வெற்றிவிழாவில் மிருணாள் தாகூர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், படத்தில் அவர் நடிக்கவில்லை. இருப்பினும் விழாவில் தனுஷூக்காக கலந்துகொண்டதாக பேசப்பட்டது. தனுஷ் - மிருணாள் திருமணம் குறித்த எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. வதந்திகளாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக ஆங்கில செய்தி ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த இயக்குநர், “இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?”

”விவாகரத்து நடந்தபோது மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்தே இருப்போம் என்று தனுஷும், அவரின் முன்னாள் மனைவியும் முடிவு செய்தார்கள். தனுஷை பொறுத்தவரை அவருக்கு 2-வது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. அதற்கு காரணம் தனது மகன்களுக்கு சித்தியாக ஒருவரை முன்னிறுத்த அவர் விரும்பவில்லை. தனுஷ் - மிருணாள் தாக்கூர் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கும். ஆனால் அது திருமணத்தில் முடியும் என சொல்ல முடியாது.” என தெரிவித்துள்ளாராம்.
யார் அந்த இயக்குநர் என்பதும், அவர் பெயரும் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் தனுஷ் - மிருணாள் திருமணம் குறித்த தகவல் உண்மையாக வாய்ப்பில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.