வேலையை ஆரம்பித்த செங்கோட்டையன்! பனையூர் To பனையூர்.. பக்கா ப்ளான் போட்ட விஜய்! புது ட்விஸ்ட்!
தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்த பிறகு அரசியலில் அடுத்த கட்ட மாற்றத்துக்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் நடிகர் விஜய்
ஏற்கனவே பல கட்சிகளுடன் இணக்கமான சூழலை பேணி வரும் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு புதிய கட்சிகளை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை விஜய் கூட்டணிக்கு கொண்டுவர செங்கோட்டையன் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்குவதாக அறிவித்த பிறகு, அவர் அமைதியாக இருந்ததாக தோன்றினாலும், உள்ளுக்குள் பெரிய கூட்டணி அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக, திமுகவுக்கு நேரடியாகச் சவால் அளிக்கக் கூடிய ஒரு வலுவான எதிர்க் கட்சி கூட்டணியை உருவாக்குவது விஜயின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்நிலையில், இந்த கூட்டணிக்குள் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் மற்றும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளை கொண்டு வர முயற்சி நடக்கிறது.
செங்கோட்டையன் சிறு கட்சிகளின் வாக்குகள் ஒன்றிணைந்தால் திமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியும் என்ற கணக்கே இந்த முயற்சியின் அடிப்படை என்கின்றனர் விஜய் தரப்பினர். ஓபிஎஸ் தற்போது வைத்திருக்கும் அதிமுக தொண்டர்கள்: உரிமை மீட்பு குழுவை "அதிமுக உரிமை மீட்பு கழகம்" என்ற பெயரில் மாற்றத் திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தையை செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர் விஜயின் தவெகவில் சேர்ந்ததும், இந்த பேச்சுவார்த்தைகள் மேலும் வேகமடைந்துள்ளன.
தவெக கூட்டணி டிடிவி தினகரனும் தனிக்கட்சி வைத்திருப்பதால், அவருடன் இணைவதும் கடினம் அல்ல. விஜயுடன் கூட்டணி அமைக்க தினகரனும் ஓபிஎஸும் மனதளவில் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இதனால், இந்த இருவரின் ஆதரவும் தவெக கூட்டணிக்கு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழுவையும் செங்கோட்டையன் தலைமையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவு இந்த எல்லாவற்றுக்கும் முக்கியமானவர் அன்புமணி ராமதாஸ். விஜய்க்கு கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அவர் மறைமுக ஆலோசனைகள் நடந்து வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதனால், அன்புமணியை கூட்டணிக்குள் கொண்டு வருவது விஜயின் முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அன்புமணி இறுதி முடிவு எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், தனது பலத்தை 2029 மக்களவை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள, விஜய் கூட்டணி அவருக்கு நன்றாக அமையும் என பாமக வட்டாரம் கருதுகிறது.
அன்புமணி பாமக அதனால், 2026 தேர்தலை சோதனை மேடையாக பயன்படுத்தலாம் என்ற சிந்தனையும் அந்த தரப்பில் உள்ளது. மொத்தத்தில், திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பதற்காக விஜய் பல திசைகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த கூட்டணி உருவானால் அதிமுக கூட்டணியை விட வலுவாக இருக்கும் என்பதே தவெக தரப்பின் நம்பிக்கை.
பல கட்சிகள் ஒன்றாக இணைந்தால் தமிழக அரசியலில் புதிய மாற்றம் ஏற்படும். இந்த முயற்சி வெற்றியடையுமானால், 2026 தேர்தல் களம் முழுவதும் மாறும் வாய்ப்பு அதிகம் என பனையூர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.