இன்று காலை 10 மணி.. தவெகவில் சேர நேரம் குறித்த செங்கோட்டையன்
தவெகவில் இன்று (நவ.27) காலை 10 மணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சேர இருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், நேற்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், நேற்று மாலை பட்டினப்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தார்.
சுமார் 2 மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு, விஜய் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். இதைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் சேர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு தவெகவில் துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.