விஜய் குறித்து பேச உரிமை இல்லை! இபிஎஸ்சுக்கு செங்கோட்டையன் பதிலடி

விஜய் குறித்து பேச உரிமை இல்லை! இபிஎஸ்சுக்கு செங்கோட்டையன் பதிலடி

தேர்தல் கள போட்டியில் அதிமுக இல்லவே இல்லை என இபிஎஸ்சுக்கு தவெக மூத்தத் தலைவர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், தவெகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார் . இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:

2026 தேர்தலில் போட்டியே திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான. அதிமுக தேர்தல் போட்டியிலேயே இல்லை.

அதிமுகவுக்கு இபிஎஸ் தலைமை தாங்கியபிறகு அக்கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. எந்தத் தேர்தலிலும் அதிமுக வென்றது இல்லை. இதுதான் உண்மை நிலவரம். இதை இபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும்..

அதனால் விஜய் குறித்தும், தவெக குறித்தும் பேச இபிஎஸ்ஸுக்கும், அதிமுகவுக்கும் எந்தத் தகுதியும் இல்லை என்றார்.