மயங்கி சரிந்த ஹெச். ராஜா.... மருத்துவமனையில் அனுமதி
பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சரிந்தார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.